செய்திகள்

குறுகிய காலத்தில் நிறைவடையவுள்ள பிரபல தொடர்!

கிழக்கு வாசல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வரும் கிழக்கு வாசல் தொடரில் நடிகர் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பிரதான வேடத்தில் நடிக்கிறார்கள். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார்.

கிழக்கு வாசல் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்த போதும், டிஆர்பி குறைந்தே காணப்படுகிறது. மேலும், நாயகி ரேஷ்மா முரளிதரன் இத்தொடரிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிழக்கு வாசல் தொடரை விரைவில் முடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதல் தொடங்கப்பட்ட இத்தொடர் விரைவில் நிறைவடைய உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரும் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT