சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி
இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் மன அழுத்தத்தை குறைகிறது என்றும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் தொடங்குகிறது.
கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார்.
இந்நிலையில் சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
இதில், கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகத் தொடருகின்றனர். மேலும், இந்தப் பட்டியலில் புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், பிக்பாஸ் புகழ் கூல் சுரேஷ், காத்துக் கருப்பு கலை, சமூகவலைதளத்தில் நாற்காலிகள் விற்று பிரபலமான சிறுவன் சோஃபா ரசூல் ஆகியோர் இந்த சீசனில் கோமாளியாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக்குகளாக திவ்யா துரைசாமி, வசந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், விடிவி கனேஷ், பிக் பாஸ் பிரபலங்கள் பூர்ணிமா ரவி, தினேஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குக் வித் கோமாளி 5-வது சீசன் நிகழ்ச்சி, வரும் ஏப். 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.