திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!
நடிகர் அஜித்குமார் - ஷாலினி இணை தங்களின் திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி.
இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
24 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், அஜித் - ஷாலினியின் 24-வது திருமண நாளை முன்னிட்டு இன்று இருவரும் நட்சத்திர உணவகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இவர்களைச் சந்தித்த ரசிகர்களும் இருவருடனும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.