செய்திகள்

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

நடிகை பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சரிகம கைப்பற்றியுள்ளது.

இங்க நான் தான் கிங்கு படத்தின் படத்தின் முதல் பாடலான மாயோனே என்ற பாடல் வெளியாகி கவனம் பெற்றது. முத்தமிழ் இப்பாடலுக்கு வரிகளை எழுத, ஷான் ரோல்டன் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இப்படம் கோடை வெளியீடாக மே. 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT