செய்திகள்

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சூர்யா படத்துக்கு முன்பாக இயக்குநர் சுதா கொங்கராவின் புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இப்படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது ஜி.வி.யின் 100வது படம்.

சூர்யா கங்குவா படப்பிடிப்பினை முடித்துவிட்டார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.

துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்கரா, துருவ் விக்ரமிடம் கதையை கூறிய கதை பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்சீட் உறுதியான பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT