வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.  படம்: ட்விட்டர்
செய்திகள்

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு சினிமாவின் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர் கோட் படத்தின் 2ஆவது பாடல் எப்போது எனக் கேட்டதற்கு,“ஜூன்” எனப் பதிலளித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT