தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கோட் படத்தின் ’விசில் போடு’ பாடல் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடல் வைரானது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில், “அன்றே கணித்த வெங்கட் பிரபு எனச் சொல்லுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் யுவன் இசையில் உருவான விசில் போடு என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
நடிகர் விஜய் பாடியல் இந்தப் பாடல் வெளியான சமயத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
தற்போது, தவெக ஆதரவாளர்கள் இந்தப் பாடலை அவர்களது சின்னத்தின் தேசிய கீதம் போல சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
மங்காத்தா மறுவெளியீட்டிற்கு வந்திருந்த வெங்கட் பிரபுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியிருப்பதாவது:
அன்றே கணித்தார் விபி (வெங்கட் பிரபு) என்கிறார்கள். இந்தப் பாடல் தற்போது தேசிய கீதம் போல மாறியிருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிஎஸ்கே பின்னணியைக் கொண்டு உருவானதால் இந்தப் படத்துக்கு தொடக்கத்தில் விசில் போடு எனப் பெயரிட முடிவெடுத்திருந்தேன்.
இந்தப் பாடலை எழுதிய மதன் கார்க்கியிடம் இது குறித்து பேசும்போதுதான் விசில் போடு என்ற வரிகளைப் பயன்படுத்தலாமா என அவர் கேட்டு உருவானது.
அப்போது, மும்பை, ஆர்சிபி ரசிகர்கள் என்னைத் திட்டினார்கள். இப்போது அனைத்து தளபதி ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.