செய்திகள்

இனிமேல் விவாத விடியோ!

நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் பாடலின் உருவாக்க விடியோ வெளியாகியுள்ளது.

DIN


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கு கூலி எனப் பெயரிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற நடிகை ஸ்ருதி ஹாசனின் ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்தார்.

ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

தற்போது, நடிகர் கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் இணைந்து இப்பாடலை உருவாக்கிய விதமும் அவர்களின் கேள்வி பதில்களும் இடம்பெற்ற விடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT