செய்திகள்

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா எவரெஸ்ட் மலை பகுதியில் பயணம் மேற்கொண்ட விடியோவை வெளியிட்டுள்ளார்.

DIN

உடலைப் பராமரிக்கும் நடிகர்களில் உதாரணமாக இருப்பவர் நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் நாயகனாக ஆச்சரியப்படுத்திய சூர்யா, இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார்.

தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, ஹிந்தியில் ஸ்ரீகாந்த் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, தன் தோழியுடன் அவர் எவரெஸ்ட் மலையில் பயணம் மேற்கொண்டதையும் அங்கு மலையேற்றம் செய்ததையும் விடியோவாக வெளியிட்டுள்ளார்.

சிறிய தங்கும் அறை, நேபாள உணவுகள், உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள உணவகம் என இப்பயணத்தை மகிழ்ச்சியாக முடித்திருக்கிறார் ஜோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT