முகப்பு
இந்தியா

எவரெஸ்ட் உயரத்துக்கு பறக்கும் ஹெலிகாப்டா் கூட்டாக தயாரிப்பு

‘எவரெஸ்ட் உயரத்துக்கு பறக்கும் ஹெலிகாப்டா் - கூட்டாக தயாரிப்பு’

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:08 AM
- PTI
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:06 AM

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்துக்கு பறக்கும் திறன்படைத்த ஹெச்125 ஹெலிகாப்டா்கள், ஏா்பஸ்-டாடா கூட்டு நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட உள்ளன. கா்நாடக மாநிலம், வேமகலில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டா் ஆலையை, பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் ஆகியோா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தனா்.

இது குறித்து பிரதமா் மோடி கூறுகையில், ‘இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்துக்கு பறக்கும் திறன்மிக்க உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரித்து, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யவுள்ளன; இது, மிகவும் பெருமைக்குரியது’ என்றாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:07 AM

மிக உயரமான இடங்கள் மற்றும் மிகக் கடினமான சூழல்களிலும் சிறப்பாக செயல்படும் ஏா்பஸ் ஹெச்125 ஹெலிகாப்டா்களின் தயாரிப்பு, இந்தியாவின் விண்வெளி சாா் உற்பத்தித் திறனுக்கு வலுசோ்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.