எவரெஸ்ட் மலையேறிய முதல் அமெரிக்கரான ஜிம் விட்டேக்கர் காலமானார்!
எவரெஸ்ட் மலையேறிய முதல் அமெரிக்கரான ஜிம் விட்டேக்கர் காலமானார்...
புகழ்பெற்ற அமெரிக்க மலையேற்ற ஜாம்பவான் ஜிம் விட்டேக்கர் 97 வயதில் காலமானார்.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையை வெற்றிகரமாக ஏறிய முதல் அமெரிக்கர் எனும் பெருமையைப் பெற்றவர் ஜிம் விட்டேக்கர். இவர், கடந்த 1963 ஆம் ஆண்டு நவாங் கோம்பு என்பவருடன் இணைந்து எவரெஸ்ட் மலையின் உச்சத்தை வெற்றிகரமாக அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.இ.ஐ. எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விட்டேக்கர், எவரெஸ்ட் மலையேறி சாதனைப் படைத்ததால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இதனால், அவர் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள போர்ட் டவுன்செண்ட் பகுதியில் வசித்து வந்த 97 வயதான ஜிம் விட்டேக்கர், கடந்த ஏப். 7 அன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று அறிவித்துள்ளனர்.
முன்னதாக, உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீரர்கள் மேற்கொண்ட மலையேற்றங்களில் ஜிம் விட்டேக்கர் பங்கேற்றார்.
மேலும், கொல்லப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சகோதரரும், அப்போதைய அதிபர் வேட்பாளருமான ராபர்ட் கென்னடி மற்றும் ஜிம் விட்டேக்கர் இணைந்து கடந்த 1968 ஆம் ஆண்டு கனடாவின் 14,000 உயர மலையில் ஏறி அதன் சிகரத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Renowned American mountaineering legend Jim Whittaker passed away at the age of 97.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.