நடிகை மஞ்சு வாரியர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான மஞ்சு வாரியார், தமிழில் அஜித், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.