தனுஷ் படத்தில் சுனைனா 
செய்திகள்

தனுஷ் படத்தில் சுனைனா! எந்தப் படம் தெரியுமா?

நடிகை சுனைனா தனுஷ் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

DIN

காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிப் பல படங்கள் நடித்துள்ளார். கடைசியாக ரெஜினா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. 

சுனைனா

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன. 

நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். இதில் இன்ஸ்பெக்டர் ரிஷி எனும் இணையத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் காதலரின் கைகள் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.

சுனைனா பகிர்ந்த நிச்சயதார்த்த புகைப்படம்.

இந்நிலையில் நடிகர் தனுஷுடன் நடிப்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நன்றி தெரிவித்து அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடிக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தினை இயக்குகிறார். அடுத்து இளையராஜா பயோபிக்கில் நடிக்கிறார்.

சமீபத்தில் ராயன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குபேரா பட போஸ்டர்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்வி பதில் பகுதியில், “ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள். அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். சேகர் கம்முலா படத்துக்கு வாழ்த்துகள். அவர் வலுவான பெண்கள் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தக் கூடியவர். இது மறக்க முடியாத அனுபவமாக வாழ்த்துகள்” எனக் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு நடிகை சுனைனா நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT