நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இப்படம், ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல். இதையொட்டி படத்தின் புரோமோஷன் பணிகளைத் படக்குழு ஏற்கெனவே துங்கிவிட்டது. தங்கலான் படத்தில் பழங்குடியின தெய்வமாக மாளவிகா மோகன் வருகிறாராம்.
மேலும் படத்திற்காக எருமை மீதும் அவர் சவாரி செய்து நடித்துள்ளாராம். இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டு தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.