நிச்சயத்திற்கு முன் சமந்தாவைப் புகழ்ந்த சோபிதா துலிபாலா!
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
நடிகை சோபிதா துலிபாலா நடிகை சமந்தாவை பாராட்டிய விடியோ வைரலாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.
Advertisement
இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நடிகை சமந்தா குறித்து சோபிதா பேசிய பழைய காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், “நடிகை சமந்தாவின் பயணம் அற்புதமானது. அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். உண்மையிலேயே அவை சிறப்பானவை” எனக் கூறியுள்ளார்.
அதே காணொலியில், “நாக சைதன்யா மிகவும் அமைதியானவர். நிதானமும் கண்ணியமும் உடையவர். அவரைப் பாராட்டுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.