செய்திகள்

ஆர்வமூட்டும் விஎஃப்எக்ஸ்... கங்குவா டிரைலர்!

DIN

நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கங்குவா இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கங்குவா டிரைலரில்..

தற்போது, இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

கங்குவா டிரைலர் காட்சி.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

ஐஸ் குல்பி... சாக்‌ஷி மாலிக்!

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!

சினேகிதியே... அதுல்யா ரவி!

SCROLL FOR NEXT