நடிகை மாளவிகா மோகனன் 
செய்திகள்

மாளவிகா மோகனனின் சிவப்பு புடவை ரகசியம்!

DIN

நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சிவப்பு புடையை அணிந்து வருகிறார்.

மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். தற்போது, அதிகம் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர நாளன்று தங்கலான் திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாளவிகா மோகனன்.

’தங்கலான்’ திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார் எனத் தெரிகிறது. அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்றதாம்.

அவ்வளவு நேரம் மேக்கப் போட்டு அந்த மேக்கப்புடன் நடிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தாலும் தனக்கான காட்சிகளைச் சரியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு சிலம்பம் சுத்தும் காட்சிகள் அதிக ரீ-டேக் போன காரணத்தினால் அவருடைய கையில் வீக்கம் ஏற்பட்டது.

ஆனால், தீவிர பயிற்சியால் தனது காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து முடித்தார் மாளவிகா மோகனன். மேலும், இந்தப் படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிவப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன்

அந்த சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் வருகிறார். அந்த நிற புடவையில் மாளவிகா வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும் ரசிகர்களிடையே பெரிய ஈர்ப்பைக் கொடுத்துள்ளன.

பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது தங்கலான் புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT