நடிகைகள் ஊர்வசி, பார்வதி.  
செய்திகள்

கேரள மாநில விருதில் புதிய சாதனை! நடிகை ஊர்வசி கூறியதென்ன?

நடிகை ஊர்வசி 6ஆவது முறையாக கேரள மாநில அரசின் விருதினை பெற்றுள்ளார்.

DIN

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி. தொடக்கத்தில் நாயகியாகவும், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

55 வயதாகும் ஊர்வசி 2006இல் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் 2 முறை தமிழக அரசின் மாநில விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

கடைசியாக தமிழில் ஜே.பேபி படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் நடிகை பார்வதி உடன் உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தில் நடித்ததுக்காக கேரள மாநில அரசின் விருது கிடைத்துள்ளது. இது இவருக்கு 6ஆவது விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1989, 1991ஆம் ஆண்டு தொடர்சியாக 3 முறை விருது வென்றிருந்தார். தற்போது, நடிப்புக்காக மலையாளத்தில் அதிகம் முறை மாநில விருதுகளை வென்றவர் (பெண்கள் பிரிவில்) என்ற சாதனையை ஊர்வசி படைத்துள்ளார்.

இது குறித்து ஊர்வசி பேசியதாவது:

நடிக்கும்போது விருது குறித்த எண்ணம் மனதில் வராது. படப்பிடிப்பில் இயக்குநர் டேக் ஓக்கே சொல்லுவதுதான் முதல் விருது.

இந்த விருது கிடைத்ததுக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பள்ளியில் வழங்கும் புராக்ரஸ் கார்டு (முன்னேற்ற அறிக்கை) பார்ப்பதுபோலதான் இந்த விருதுகளையும் பார்க்கிறேன்.

உள்ளொழுக்கு படத்தில் சிறப்பாக நடிக்க காரணம் என்னுடன் பார்வதி நடித்திருந்தார். அவரது நடிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சில சவால்களை சந்தித்திருந்தேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT