செய்திகள்

அரியணையில் மகாராஜா!

மெல்போர்ன் திரைப்பட விழாவில் மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதன் சிறந்த இயக்குநராகத் தேர்வு

இணையதளச் செய்திப் பிரிவு

மெல்போரினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் சிறந்த இயக்குநருக்கான விருது பட்டியலில், இம்தியாஸ் அலி, கபீர் கான், கரண் ஜோஹர், நித்திலன் சாமிநாதன், ராஜ்குமார் ஹிரானி, ராகுல் சதாசிவன், விது வினோத் சோப்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், அதிகப்படியான விருப்பத்தேர்வாக மகாராஜா தேர்வானதால், நித்திலன் சாமிநாதன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்; கபீர் கானும் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார்.

மெல்போர்ன் திரைப்பட விழாவில் மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதன் சிறந்த இயக்குநராகத் தேர்வு

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

SCROLL FOR NEXT