பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா லட்சுமி. 
செய்திகள்

யாராலும் இப்படி நடிக்க முடியாது... பார்வதியைப் புகழ்ந்த ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை பார்வதி திருவோத்துவின் நடிப்பு கவனம் பெற்று வருகிறது.

DIN

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை பார்வதி திருவோத்துவின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

நடிகை பார்வதி பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக பல பாராட்டுகளைப் பெற்றவர் மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து பல மலையாளப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து மிக முக்கியமான நடிகையானார்.

குறிப்பாக, பெங்களூர் டேஸ், சார்லி, என்னு நிண்டே மொய்தீன் படங்கள் அவரை அடுத்தக்கட்டதிற்கு அழைத்துச் சென்றன.

இன்று தென்னிந்தியளவில் கவனம் பெற்றுள்ள நடிகையாக இருக்கிறார். அதேநேரம், தன் நடிப்புத் திறனையும் அபாரமாக வளர்த்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் திரைப்படங்களில் பார்வதி தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த 2 நாள்களில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் திரைப்படத்தைப் பார்த்தேன். நடிகை பார்வதியின் திறமையைக் கண்டு பிரமிப்பில் இருக்கிறேன். முழுமையான திறமைசாலி. அன்புள்ள பார்வதி, நீங்கள் தங்கம். ஒவ்வொரு முறையும் திரையில் உங்களைப் பார்க்கும்போது நீங்கள் செய்ததை யாராலும் செய்ய முடியாது என்பதையே அறிகிறேன். நீங்களே சிறந்தவர்.” எனப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ தவறான பயன்பாட்டைத் தடுக்க உலகளாவிய ஒப்பந்தம்! ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

28 மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: புதிய தீவுகளை திறக்க அந்தமான் அரசு ஆய்வு

தில்லி உயிரியல் பூங்காவில் குள்ளநரிகள் தப்பின: தேடுதல் நடவடிக்கையில் அதிகாரிகள்

SCROLL FOR NEXT