செய்திகள்

பாலியல் தொல்லை... ரியாஸ் கான் மீது குற்றச்சாட்டு!

நீதிபதி ஹேமா குழு அறிக்கை கேரளத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

DIN

நடிகர் ரியாஸ் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, ‘என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை’ எனக் கூறியதாக ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT