பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், நிகிலா விமல், அன்னா பென்.  
செய்திகள்

தமிழில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள்!

DIN

இந்தாண்டின் தமிழ் வெற்றி படங்களில் மலையாள நடிகைகளே நடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு துவக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரை மிகப்பெரிய வெற்றிப்படங்களோ விமர்சன ரீதியான நல்ல படங்களோ அதிகமாக அமையவில்லை.

சுந்தர். சியின் அரண்மனை - 4, விஜய் சேதுபதியின் மகாராஜா, இந்தியன் - 2, தனுஷின் ராயன் திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன. சூரியின் கருடன் எதிர்பாராத விதமாக நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜமா, மின்மினி, தங்கலான், வாழை, கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்கள் விமர்சகர்களிடம் நல்ல பாராட்டுகளைப் பெற்றன. இதில், தங்கலான் படத்தில் நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடித்திருந்தனர். வாழையில் நிகிலா விமலும், கொட்டுக்காளியில் அன்னா பென்னும், மின்மினி படத்தில் எஸ்தர் அனிலும் நடித்து படத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர்.

நடிகைகள் அபர்ணா பாலமுரளி, எஸ்தர் அனில்.

ராயன் திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளியும், கருடனில் சிவதாவும் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரும் மலையாள நடிகைகள். ஆச்சரியமாக, தமிழில் வெளியான இந்தாண்டின் வெற்றிப்படங்களின் நாயகிகளும்கூட.

சினிமாவில் அபூர்வமாக இப்படி நடப்பதுண்டு என்றாலும், திறமையான இயக்குநர்கள் தமிழ் நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்களைக் கவர்ந்த டியூட் சரத் குமார்!

தங்கம் வேண்டாம்... தானே ஒளிரும்... பூஜா சோப்ரா!

அழகும் அதற்கப்பாலும்... அகன்ஷா புரி!

கடல் கன்னி... அதிதி பொஹங்கர்!

இன்டர்நேஷனல் பவர் ஹவுஸ்... நோரா பதேஹி!

SCROLL FOR NEXT