செய்திகள்

‘கூலி’ படத்தில் இணைத்ததற்கு நன்றி லோகேஷ்: நாகர்ஜுனா

கூலி படத்தில் இணைத்ததற்கு லோகேஷ் கனகராஜுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் இணைத்ததற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரை படக்குழு பகிர்ந்தது. இதில், சிமோன் என்ற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார். நாகர்ஜுனாவின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியானது.

இதுகுறித்து நடிகர் நாகர்ஜுனா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கைதி படத்தில் இருந்தே உங்களுடன்(லோகேஷ் கனகராஜ்) பணியாற்ற வேண்டும் எனக் காத்திருந்தேன். கூலி படத்தில் என்னை இணைத்தற்கு நன்றி லோகி. புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளேன். தலைவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

அண்ணா நகா் மேற்கு மில்லினியம் பூங்காவில் இறகுப்பந்து மைதானத்துக்கு அடிக்கல்

இருமல் மருந்து இறப்புகள்: கோல்ட்ரிஃப் விற்பனைக்கு தில்லி அரசு தடை

முதல்வா் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நீதிபதி மீது காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT