கோழிப்பண்ணை செல்லதுரை போஸ்டர்.  
செய்திகள்

ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை!

அமெரிக்காவில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை படம் தேர்வாகியுள்ளது.

DIN

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி.

கடைசியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது, சீனு ராமசாமி அடுத்ததாக ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படம் செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் 22வது ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது என இயக்குநர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இதுவரை வேறெந்த தமிழ்த் திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது என இயக்குநர் சீனு ராமசாமி பெருமையாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT