த.செ. ஞானவேல், ரஜினி.  
செய்திகள்

வேட்டையன் டப்பிங்கில் இயக்குநரை பாராட்டிய ரஜினி! (விடியோ)

வேட்டையன் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

DIN

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஃபகத் பாசில், துஷாரா உள்ளிட்ட படக்குழுனர் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

டப்பிங் விடியோவில் நடிகர் ரஜினி, “டிரைக்டர் சார்... இது சூப்பர் சார்” எனக் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT