அஜித் குமார், வெங்கட் பிரபு, விஜய்  கோப்புப் படம்
செய்திகள்

கோட் படத்தில் அஜித்! வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசியம்!

கோட் படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.

கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

விஜய் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல வருடங்கள் இருந்துவந்துள்ளார்கள். விஜய் தற்போது அரசியலுக்கு செல்லவிருப்பதால் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே இனி போட்டி, சண்டை சச்சரவுகள் இருக்காது என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

கோட் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் கேமியோ செய்கிறார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு பேசியதாவது:

அஜித்துடன் படம் எடுத்துவிட்டு விஜய்யை சந்திப்பதும் விஜய்யுடன் படம் எடுத்துவிட்டு அஜித்தை சந்திப்பதும் என நான் எளிதாக செய்துவிட்டேன் என நிறையப்பேர் என்னை பாராட்டுவார்கள். அவரது ரசிகர்களும் என்னை திட்டவில்லை.

கோட் படத்தில் நடிகர் அஜித்தின் ஒரு மொமண்ட் (தருணம்) இருக்கிறது. ஆனால் அது குரலா அல்லது அவரது காட்சியா என நான் தற்போது கூறவில்லை. ஆனால், படத்தில் அவர் சம்பந்தப்பட்ட தருணம் இருக்கிறது என்பது மட்டும் உறுதி எனக் கூறினார்.

இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT