புஷ்பா - 2 போஸ்டர் 
செய்திகள்

புஷ்பா - 2 முன்பதிவில் ரூ.100 கோடி வசூல்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 முன்பதிவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

DIN

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.

கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக இது இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார்.

சாம் சிஎஸ் பின்னணி இசையமைப்பாளராகவும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் விமலின் மகாசேனா!

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

எம்ஜிஆரா? நம்பியாரா? கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம்!

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதயத்தில் துளைகளுடன் பிறக்கும் குழந்தைகள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT