சந்தோஷ் நாராயணன் 
செய்திகள்

பா. இரஞ்சித் படங்களுக்கு இனி நான்தான் இசையமைப்பேன்: சந்தோஷ் நாராயணன்

DIN

இயக்குநர் பா. இரஞ்சித் படங்களுக்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் - 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ்.ஜே. அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் படக்குழுவினர் உள்பட இயக்குநர்கள் பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆதிக் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய சந்தோஷ் நாராயணன், “ஆரம்பத்தில் டிஜேவாக இருந்தேன். அட்டக்கத்தி படத்திற்கு முதலில் நான் வாசித்த இசை இரஞ்சித்துக்கு பிடிக்கவில்லை. பின், கிராமிய இசை குறித்த பார்வையைக் கொடுத்து என்னை உருவாக்கியது அவர்தான். நலன் குமாரசாமியின் சூது கவ்வும் திரைப்படத்தை எப்போதும் ஒளிபரப்பினாலும் பார்த்துக்கொண்டே இருப்பேன். அதேபோல், இனிமேல் பா. இரஞ்சித் படங்களுக்கு நான்தான் இசையமைப்பேன். வேறு யாரையும் விடமாட்டேன். இது கட்டளை” எனத் தெரிவித்தார்.

பாடகர் தெருக்குரல் அறிவு பாடிய, ‘என்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு அவருக்கான அங்கீகாரத்தை, பாடலின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் வழங்கவில்லை என பா. இரஞ்சித்தும் சந்தோஷும் நீண்ட காலமாக பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியாக, சார்பட்டா பரம்பரை படத்தில் இணைந்து பணியாற்றினர்.

அதன்பிறகு, நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலானுக்கு பா. இரஞ்சித் வேறு இசையமைப்பாளர்களையே பயன்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT