வடிவேலு, சிங்கமுத்து DIN
செய்திகள்

வடிவேலு குறித்து அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை!!

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு.

DIN

நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களுக்கு நடிகா் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டிய நடிகா் வடிவேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அதில், ‘பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகா் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளித்த நிலையில், அவதூறு வழக்கு தொடர்ந்த பிறகும், தொடர்ந்து அவதூறு கருத்துகளை சிங்கமுத்து பேசுவதாக வடிவேலு தரப்பில் இன்று முறையிடப்பட்டது.

இந்த நிலையில், வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளை பேச சிங்கமுத்துவுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவதூறு விடியோக்களை நீக்க சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து கடிதம் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT