முகப்பு
செய்திகள்

சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி?

சூரி படத்தின் நாயகி குறித்து...

Updated On : 7 டிசம்பர், 2024 at 11:26 AM
பகிர்:

நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களில் நாயகனாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், இனி கதாநாயகனாக நடிக்கவே அவர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது நாயகனாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில், விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

இதையும் படிக்க: வாடிவாசல் அப்டேட்!

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாகும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →