1 கோடி பார்வைகளைக் கடந்த என்னை இழுக்குதடி!
என்னை இழுக்குதடி பாடல் யூடியூபில் ஹிட் அடித்துள்ளது...
காதலிக்க நேரமில்லை படத்திற்காக ஏ. ஆர். ரஹ்மான் பாடிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நவ. 22-ல் வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர்.
பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. முக்கியமாக, 2கே ரசிகர்களிடமும் வைரலாகியுள்ளது.
”32 வருடமாகியும் கரையைக் கடக்காத ஒரே புயல், எங்கள் இசைப்புயல் மட்டுமே..” என பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் மட்டும் 1 கோடி (10 மில்லியன்) பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.