அருண் பிரசாத்துக்கு ஆதரவு குரல் எழுப்பும் செளந்தர்யா படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: அருணுக்கு ஆதரவாக களமிறங்கிய செளந்தர்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அருண் பிரசாத்துக்கு நடிகை செளந்தர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அருண் பிரசாத்துக்கு நடிகை செளந்தர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அருணின் செயல்களை செளந்தர்யாவும், செளந்தர்யாவின் செயல்களை அருண் பிரசாத்தும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதனால், இவர்கள் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக அருண் பிரசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் ரஞ்சித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த வாரத்திற்கு பிக் பாஸ் சார்பில் தொழிலாளர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், அருண் பிரசாத், ரயான், ராணவ், சத்யா, பவித்ரா, அன்ஷிதா, ரஞ்சித் ஆகியோர் தொழிலாளர்களாக விளையாடுகின்றனர்.

இவர்களுக்கு வேலை வழங்கும் ஆலை மேலாளர்களாக செளந்தர்யா, முத்துக்குமரன், மஞ்சரி, ஜெஃப்ரி, வி.ஜே. விஷால், தீபக் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

அருண் பிரசாத்துக்கு ஆதரவு

பிக் பாஸ் விதிகளின்படி போட்டியில் சரியாக செயல்படாத தொழிலாளி ஒருவரையும், மேலாளர் ஒருவரையும் அணிமாற்றலாம்.

அந்தவகையில் தொழிலாளியாக இருந்த அருண் பிரசாத், மேலாளராக மாற்றப்படுகிறார். மேலாளர் அணியில் இருந்த வி.ஜே. விஷால் தொழிலாளர்கள் அணிக்கு மாற்றப்படுகிறார்.

இந்நிலையில் மேலாளர் அணியில் இருந்தும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே அருண் பிரசாத் செயல்படுவதாக, மேலாளர் அணியில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலாளர் அணியில் முரண்பாடுகள் அதிகம் இருந்ததாகவும், தொழிலாளர்களுக்கு சாதகமாகவே அருண் பிரசாத் இருப்பதாகவும் தர்ஷிகா புகார் எழுப்பினார்.

முழுக்க முழுக்க தொழிலாளிகளுக்கான யூனியன் லீடர் போன்று அருண் பிரசாத் செயல்பட்டதாக மஞ்சரி குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக அழுத தீபக்!

மேலாளராக பொறுப்பு கொடுக்கப்பட்ட சிறிதுநேரத்தில் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை அருண் பிரசாத் பயன்படுத்தவில்லை என்றார் தீபக்.

இதனால் மேலாளர் அணியில், உள்ளவர்கள் அனைவரும் ஒருமனதாக அருண் பிரசாத்துக்கு எதிரான நின்று மறுபடியும் அவரை தொழிலாளர் அணிக்கே மாற்றிவிடலாம் என்று முடிவு செய்து பிக் பாஸிடம் கூறுகின்றனர்.

அப்போது குறுக்கிடும் செளந்தர்யா இதில் தனக்கு உடன்பாடில்லை என கருத்து தெரிவிக்கிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

செளந்தர்யா முதல்முறையாக அருண் பிரசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT