முகப்பு
செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!

நடிகர் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 13 டிசம்பர் 2024, 1:18 pm IST
நடிகர் அல்லு அர்ஜுன் கைது - படங்கள்: எக்ஸ்
பகிர்:

நடிகர் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இதனையடுத்து காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரினால் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து ஹைதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிக்கட்பாளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.