கைதுக்கு பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு அல்லு அர்ஜுன் அழைத்துச் செல்லப்பட்டார். PTI
செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் சிறை!

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவு

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அல்லு அர்ஜுன் தரப்பில் பெயில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT