அல்லு அர்ஜுன், வருண் தவான்  
செய்திகள்

ஒருவரை மட்டுமே பழி சுமத்த முடியாது: அல்லு அர்ஜுன் வழக்கு பற்றி வருண் தவான்!

ஹிந்தி நடிகர் வருண் தவான் அல்லு அர்ஜுன் வழக்கில் ஒருவரை மட்டுமே பழி சுமத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

DIN

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஹிந்தி நடிகர் வருண் தவான், இதற்காக அவர் ஒருவரை மட்டுமே பழி சுமத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற கவிதா (35) என்பவர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும், இவருடன் கூட்ட நெரிசலில் சிக்கிய அவருடைய 8 வயது மகன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரினால் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபற்றி பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்வில் கேட்டபோது நடிகர் வருண் தவான் கூறியதாவது:

ஒருவரை மட்டும் பழிசுமத்த முடியாது

பாதுகாப்பு அம்சங்களை ஒரு நடிகர் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. அதை மக்களுக்குதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு பட புரமோஷனுக்காக சில திரையரங்கள் நன்றாக வசதிகளை செய்துகொடுத்துள்ளது. நாங்கள் அதற்காக கடமைப்பட்டுள்ளோம்.

ஹைதாராபத்தில் புஷ்பா 2 படத்தின்போது நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அதற்காக வருந்துகிறேன், பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதேவேளையில் இதற்காக ஒருவரை மட்டுமே குற்றம் சுமத்துவது சரியாகாது என்றார்.

அல்லு அர்ஜுனுக்கு பிஎன்எஸ் 105, 118 (1) பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சிக்கட்பாலி காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்.

கடந்த டிச.11ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்கும்படி மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அல்லு அர்ஜுனை மாவட்ட நீதிமன்றத்திடம் ஒப்படைப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT