கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு படங்கள்: எக்ஸ் / ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ்
செய்திகள்

த்ரிஷாவின் 22 ஆண்டுகால திரைப் பயணம்..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

DIN

சூர்யா 45 படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விடியோவினை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் த்ரிஷா ஃபார்முக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறுவதாக தகவல்.

சூர்யாவும் த்ரிஷாவும் 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷா அஜித்துடன் நடித்துள்ள விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT