செய்திகள்

கங்கனாவின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மகிழ்ச்சி..!

கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மிகுந்த மகிழ்சியடைவதாக ஹிந்தி நடிகர் கூறியுள்ளார்.

DIN

கங்கனாவின் அற்புதமான எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதியளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியுள்ளார்.

எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். இந்தப் படம் கடந்த செப்.6ஆம் தேதி வெளியாகவிருந்தது.

சீக்கியர்கள் பிரச்னைகளால் மத்திய தணிக்கை வாரியம் படத்துக்கான சான்றிதழை வழங்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், கங்கனா வழக்கு தொடர்ந்து படத்துக்கான சான்றிதழைப் பெற்றார்.

எமர்ஜென்சி திரைப்படம் 2025இல் ஜன.17ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது.

இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எமர்ஜென்சி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஷ் தல்படே முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயியாகவும் கங்கனா இந்திரா காந்தியாகவும் நடித்துள்ளார்கள்.

அடல் பிகாரி வாஜபேயியாக ஷ்ரேயாஷ் தல்படே.

இது குறித்து நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியதாவது:

படம் தள்ளிப்போவது தயாரிப்பாளராக மிகவும் வருத்தமளிக்கும். எமர்ஜென்சி அற்புதமான படம். அது வெளியாவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் இக்மால் மாதிரி தீவிரமான படங்களில் நடித்ததால் நகைச்சுவை படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கோல்மால் படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பிறகு மக்கள் எந்தப் படங்களிலும் நடிக்க முடியுமென பலரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

டி20 தரவரிசை: அதிரடி நாயகன் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேற்றம்!

கேரள நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

குவாஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

SCROLL FOR NEXT