ஜி.வி.பிரகாஷ் & செல்வராகவன்  
செய்திகள்

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

'மென்டல் மனதில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

DIN

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இந்தப் படத்தினை ஜி.வி. பிரகாஷின் ’பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குநர் செல்வராகவன் கடைசியாக இரு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநராக இடைவெளி எடுத்திருந்த செல்வராகவன் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்த ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்தில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மென்டல் மனதில்

ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணையும் படம் என்பதாலும், அவர் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதாலும் ரசிகர்களிடயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு- மும்பை அதிவிரைவு ரயில்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தகவல்

நகா்ப்புறமயமாக்கலுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு சவாலாக உள்ளது: மத்திய அமைச்சா் மோகன்லால் கட்டாா்

ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு: கலபுா்கி மாவட்ட நிா்வாகத்தை அணுக உயா்நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

இருசக்கர வாகன டயா் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT