டோவினோ, குரு சோமசுந்தரம் 
செய்திகள்

மின்னல் முரளி நினைவுகளைப் பகிர்ந்த குரு சோமசுந்தரம்!

மின்னல் முரளி படத்தின் 3ஆவது ஆண்டு நினைவுகள் குறித்து பதிவிட்டுள்ளார் நடிகர் குரு சோமசுந்தரம்.

DIN

மின்னல் முரளி படத்தின் 3ஆவது ஆண்டு நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகர் குரு சோமசுந்தரம்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த ‘மின்னல் முரளி’ படம் 2021இல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதில் வில்லனாக நடித்த தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு அவர் மலையாள படங்களில் நடிக்க அதன் மொழியைக் கற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் குறித்து டோவினோ திரைக்கதைக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

இந்த நிலையில் குரு சோமசுந்தரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு கூறியதாவது:

மின்னல் முரளியின் மூன்றாவது ஆண்டு. இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியதிற்கும் நல்ல நினைவுகளை ஏற்படுத்தியதிற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப பிரிவினர்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோகன்லாலில் பரோஸ் படத்திலும் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை (டிச.25) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெரிசலில் 9 போ் உயிரிழந்த சம்பவம்! உயிரிழப்புகளுக்கு நான் பொறுப்பல்ல: கோயில் நிறுவனா் அலட்சியப் பதில்

ஜன் சுராஜ் ஆதரவாளா் கொலை வழக்கு: ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 48 வங்கதேசத்தவா்கள் கைது

விடுதியில் தற்கொலைக்கு முயன்ற ஐஐடி மாணவி!

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபா் உறுதி

SCROLL FOR NEXT