செய்திகள்

விடாமுயற்சி: முதல் பாடலின் லிரிக்கல் விடியோ!

DIN

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் மதியம் வெளியானது.

இந்த நிலையில், இந்தப் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

பாடகர் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT