முகப்பு
செய்திகள்

கங்குவா தோற்றத்தில் சூர்யா!

நடிகர் சூர்யா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 5:47 PM
பகிர்:

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் 'கங்குவா' சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. 

Advertisement

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு முன்பான புகைப்பட படப்பிடிப்பு (போட்டோஷூட்) நடந்துள்ளது. இது, படத்தின் புரோமோஷனுக்காக பயன்படுத்தப்படும். அதன் ஒரு புகைப்படத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். இது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.