அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்கிற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட் மற்றும் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார்.
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் தலைவராக முதல் படம் என்பதால், இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக வைத்தே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விஜய் என்ட்ரி! நாடாள முயன்ற நடிகர்கள்!
இச்சூழலில் இயக்குநர் அ.வினோத் நடிகர் விஜய்யிடம் அரசியல் கதை ஒன்றைக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வினோத் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கத் திட்டமிட்டிருந்த கமல் - 233 படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விஜய் - 69 படத்தை வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: 'அரசியல் மற்றொரு தொழில் அல்ல; மக்கள் பணி': விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.