செய்திகள்

ரசிகர்களைக் கவரும் எல்ஐசி விடியோ!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி படத்தின் புரோமோஷன் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு கோவை, உடுமலைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சீமான் இயற்கை விவசாயம் செய்பவராக நடிக்கிறாராம். 

இந்நிலையில், இப்படத்தின் புதிய புரோமோஷன் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், சமூக வலைதளங்களின் மூலம் ஷோபா விற்பனை செய்து பிரபலமடைந்த சிறுவன், எல்ஐசி படக்குழுவினரை சோபாவுடன் இணைத்து விற்பனை செய்வது போன்ற நகைச்சுவை விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT