செய்திகள்

ரஜினி - 171 படத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பம்!

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிக்க:  லவ்வர் டிரைலர்!

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் இளவயது காட்சிகளை உருவாக்க படக்குழு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலேயே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால், இறுதியில் அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் எல்சியு கதைக்குள் வராது என்றும் தகவல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT