செய்திகள்

அருண்ராஜா இயக்கத்தில் விஷ்ணு விஷால்!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

DIN

நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ல் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றியைப் பெற்றார்.

அதன்பின், ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நாயகன் என்கிற பெயரைப் பெற்றார்.

நல்ல படங்களைக் கொடுக்கும் நடிகராகவும் இன்று அறியப்படுகிறார். இறுதியாக வெளியாக கட்டாகுஸ்தி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. விரைவில் லால் சலாம் படம் வெளியாக உள்ளது. 

இதையும் படிக்க: விடாமுயற்சி அப்டேட்!

இந்நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்கிற வரியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘லேபிள்’ தொடர் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT