செய்திகள்

’இதனால் நிறைய இழந்துவிட்டேன்..’: விக்ராந்த்

நடிகர் விக்ராந்த் தன் சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் விக்ராந்த் கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். விஷால் நடிப்பில் வெளியான ‘பாண்டியநாடு’ திரைப்படத்தில் நல்ல நடிகர் என்கிற பெயரைப் பெற்றார். ஆனால், தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிபெறாததால் சினிமாவிலிருந்து விலக ஆரம்பித்தார். ஆனால், தற்போது   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்.9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய விக்ராந்த், “பல முக்கியமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அவர்கள் படத்தின் புரோமோஷன்களில் நடிகர் விஜய் இருந்தால் நன்றாக இருக்கும் பேசிப் பாருங்கள் என்பார்கள். நான், அவரை அழைக்க முடியாது என மறுத்துவிடுவேன். எங்கள் குடும்பத்திற்கு விஜய் அண்ணா நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். ஆனால், எனக்கு வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என நான் ஒருநாளும் விஜய் அண்ணனிடம் சென்று கேட்டதில்லை.  அவரிடம் என் நண்பர்களை அழைத்துச் செல்லவே அதிகம் யோசிப்பேன். காரணம், அவர்கள் அவரிடம் உதவி கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாகிவிடுவார்களோ என்கிற பயம்தான். அவர் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்தற்கு என் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: மிஸ்டர் எக்ஸ் ஆர்யா!

லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பிப்.5) நடைபெற்றது. இதில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT