லால் சலாம் - மத ரீதியான வசனங்கள் நீக்கம்!
லால் சலாம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் வருகிற பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதையும் படிக்க: பிரம்மயுகம் பட்ஜெட்!
இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
2.32 மணி நேரம் ஓடக்கூடிய லால் சலாம் படத்தில் இடம்பெற்ற தகாத வார்த்தைகள், மத ரீதியான வசனங்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாம்.