வெளியானது சைரன் டிரைலர்!
நடிகர் ஜெயம் ரவியின் சைரன் டிரைலர் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம்: மனம் திறந்த நடிகை நஸ்ரியா!
Advertisement
Advertisement
சைரன் திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடல் சமீபத்தில் வெளியாகியது. கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.