செய்திகள்

கல்கி படத்தில் இணைந்த அன்னா பென்!

பிரபல மலையாள நடிகை அன்னா பென் கல்கி படத்தில் நடித்துள்ளார். 

DIN

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வடிவிலான துப்பாகியை படக்குழு வடிவமைத்துள்ளது. அதன் தயாரிப்பு குறித்து விடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்  மலையாள நடிகை அன்னா பென். இவர் நடிப்பில் வெளியான ‘ஹென்னா’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கூழாங்கல் படத்தின் இயக்குநர் வினோத் ராஜ் நடிகர் சூரியை நாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடிக்க உள்ளார். இதன்மூலம் தமிழுக்கு அறிமுகமாகினார். இந்நிலையில் கல்கி படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். 

ஹைதராபாத்தில் தனது படப்பிடிப்பினை முடித்துள்ளார் அன்னா பென். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தாக்கம் ஏற்படுத்தும்படியாக இருக்கும். மேலும் இவ்வளவு லெஜண்டுகள் நடிக்கும் இந்தப் படத்தில் நான் நடித்தது உற்சாகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதைவிட வேறெப்படி தெலுங்கில் அறிமுகமாக முடியும்? என ஆச்சரியம் பொங்க சிரிப்புடன் கூறியுள்ளார். 

 இந்தப்படம் வரும் மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT