செய்திகள்

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் போர்: முதல் பாடல் வெளியானது!

அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் போர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் போர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘டேவிட்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் பிஜோய் நம்பியார். பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர்  இயக்கியுள்ளார். 

தற்போது அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் போர் என்றும், ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்து ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது.  டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் தயாரிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். 

இப்படம் மார்ச் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான  'அசராதே' என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சஞ்சித் ஹெக்டே இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு கிருத்திகா நெல்சன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலை சஞ்சித்துடன் இணைந்து  வர்ஷா எஸ் கிருஷ்ணன் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

SCROLL FOR NEXT